Linux ரன்னர்
podman, docker இயக்கிகள் ஒவ்வொரு வேலையையும் ஒரு Linux ஹோஸ்டில் உள்ள புதிய கொள்கலனில் இயக்குகின்றன. x86_64 அல்லது aarch64-க்கான நிலையான (static) nerudo-runner பைனரியைப் பயன்படுத்துங்கள்.
தொடங்குவதற்கு முன்
- cgroup v2 உள்ள ஒரு Linux ஹோஸ்ட்.
- Rootless podman 4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு, அல்லது docker 24 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு.
nerudo-runnerபைனரி. ரன்னரைப் பதிவிறக்குங்கள் பகுதியைப் பாருங்கள்.- வேலைக்கான கருவிகள் உள்ள ஒரு OCI படிமம் (image).
ரன்னர் podman-ஐயோ docker-ஐயோ நிறுவுவதோ தொடங்குவதோ இல்லை. இரண்டும் நிறுவப்பட்டிருந்தால், இயல்புநிலை இயக்கி podman. docker-ஐத் தேர்ந்தெடுக்க --driver docker என்பதைப் பயன்படுத்துங்கள்.
Rootless podman — root இல்லாமல், சாதாரணப் பயனராக இயங்கும் podman. இதுவே பரிந்துரைக்கப்படும் இயக்கச் சூழல் (runtime).
வரம்புகள் பொருந்துவதை உறுதிசெய்யுங்கள்
systemd பயனருக்கு இந்த cgroup கட்டுப்படுத்திகளை (controllers) வழங்கினால் மட்டுமே, Rootless podman CPU, நினைவகம், செயல்முறை வரம்புகளைச் செயல்படுத்துகிறது.
cat /sys/fs/cgroup/user.slice/user-$(id -u).slice/user@$(id -u).service/cgroup.controllersஎன உள்ளிடுங்கள்.- வெளியீட்டில்
cpu,memory,pidsஆகியவை இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
ஒரு கட்டுப்படுத்தி இல்லையென்றால், user@.service-க்கு Delegate=cpu cpuset io memory pids உடன் ஒரு systemd drop-in-ஐச் சேருங்கள். பின்னர் ஹோஸ்டை மறுதொடக்கம் செய்யுங்கள்.
ஒரு வேலைக் கொள்கலன் அதன் நினைவக வரம்பு இல்லாமல் இயங்கினால், nerudo-runner doctor தோல்வியடையும்.
பதிவுசெய்து சோதியுங்கள்
nerudo-runner login --repo OWNER/REPO --name linux-ci --labels LABELSஎன உள்ளிடுங்கள்.- ஓர் உரிமையாளர் அல்லது நிர்வாகியின் ஒப்புதலைப் பெறுங்கள். ரன்னரைப் பதிவுசெய்யுங்கள் பகுதியைப் பாருங்கள்.
podman pull IMAGEஅல்லதுdocker pull IMAGEஎன உள்ளிடுங்கள்.nerudo-runner doctor --driver podman --image IMAGE --cpus 4 --memory 8Gஎன உள்ளிடுங்கள்.- ஒவ்வொரு சரிபார்ப்பும்
okஅல்லதுinfoஎனக் காட்டுவதை உறுதிசெய்யுங்கள். nerudo-runner daemon --driver podman --image IMAGE --cpus 4 --memory 8G --onceஎன உள்ளிடுங்கள்.- களஞ்சியத்தில் ஒரு CI வேலையைத் தொடங்குங்கள்.
ரன்னரை systemd பயனர் சேவையாக இயக்குங்கள்
cf/nerudo-runner/deploy/systemd/nerudo-runner.serviceகோப்பை~/.config/systemd/user/கோப்பகத்திற்கு நகலெடுங்கள்.- அதன்
ExecStartவரியில்--image,--cpus,--memoryஆகியவற்றை மாற்றுங்கள். loginctl enable-linger $USERஎன உள்ளிடுங்கள்.systemctl --user daemon-reloadஎன உள்ளிடுங்கள்.systemctl --user enable --now nerudo-runnerஎன உள்ளிடுங்கள்.systemctl --user status nerudo-runnerஎன உள்ளிடுங்கள்.
நீங்கள் உள்நுழையாதபோதும் enable-linger சேவையை இயங்கச் செய்கிறது. ரன்னரின் பதிவைப் பார்க்க journalctl --user -u nerudo-runner -f என உள்ளிடுங்கள்.
systemctl --user stop கட்டளையின்போது, ரன்னர் நிற்பதற்கு முன் தனது வேலையை ரத்துசெய்து கொள்கலனை அகற்றுகிறது.
இயக்கி விவரங்கள்
- ஒவ்வொரு கொள்கலனும்
--cpus,--memory,--pidsஆகியவற்றைப் பெறுகிறது. Swap முடக்கப்பட்டுள்ளது. - கொள்கலன் ரன்னரின் பயனராக இயங்குகிறது. podman-இல்,
--userns keep-idஅந்தப் பயனரைப் பொருத்துகிறது (maps). - கொள்கலனுக்கு capabilities எதுவும் இல்லை; அதில்
no-new-privilegesஉள்ளது; அதன் root படிக்க மட்டுமானது. - பணியிடம் (workspace)
--work-dirகோப்பகத்தின் கீழ் உள்ள ஒரு ஹோஸ்ட் கோப்பகம். அதற்கு அளவு வரம்பு இல்லை. /tmpஒரு நினைவகக் கோப்பு முறைமை./tmp-இல் உள்ள கோப்புகள் வேலையின் நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன.- கொள்கலன், இயந்திரத்தின் (engine) இயல்புநிலைப் பிணையத்தைப் பயன்படுத்துகிறது. அது ஹோஸ்டின் சேவைகளையும் அந்தப் பிணையத்தில் உள்ள மற்ற கொள்கலன்களையும் அடைய முடியும். வேறு சேவைகள் இல்லாத ஒரு ஹோஸ்டில் ரன்னரை இயக்குங்கள், அல்லது ஃபயர்வால் விதிகளைக் கொண்டு bridge-ஐத் தடுங்கள்.
ரன்னர் பிழைகாணல், ரன்னர் வரம்புகள் ஆகியவற்றையும் பாருங்கள்.